கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்து… சென்னையைச் சேர்ந்த 3 பேர் உள்பட 7 பேர் உயிரிழப்பு : போலீசார் விசாரணை

Author: Babu Lakshmanan
18 October 2022, 6:13 pm

சென்னை : கேதர்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகைக்கோயில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் இந்தக் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் வந்து செல்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல யாத்ரீகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

நடப்பாண்டு முதல் கேதர்நாத் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள், பேருந்து மார்க்கமாகவோ, ஹெலிகாப்டர் மார்க்கமாகவே குகைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், கேதார்நாத்தில் இருந்து குப்தகாசி நோக்கி சென்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கிய விபத்தில் ஒரு விமானி உள்பட 6 யாத்ரீகர்கள் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேர் சென்னையை சேர்ந்த பிரேம்குமார், கலா,சுஜாதா என்பது தெரிய வந்துள்ளது. மீதி 2 பேர் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த விமானப்போக்குவரத்துறை உத்தரவிட்டுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!