பைக்கில் செல்லும் போது அலட்சியம்… பேருந்தின் அடியில் சிக்கிய நபர் பரிதாப பலி ; பதற வைக்கும் காட்சி!!

Author: Babu Lakshmanan
2 January 2023, 5:38 pm

கேரளா மாநிலம் திருச்சூரில் இருசக்கர வாகனத்துடன் தனியார் பேருந்தின் அடியில் சிக்கிய நபர் பலியான விபத்தின் பதற வைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூர் நெடுஞ்சாலை வழியாக கடந்த வெள்ளிக் கிழமை தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் திருச்சூரிலிருந்து – கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து சங்கரன் குளம் என்னும் பகுதி அருகே வரும் போது, இருசக்கர வாகன ஒட்டி ஒருவர் கவன குறைவாக இருசக்கர வாகனத்துடன் வலது புறமாக சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அந்த இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியுள்ளது. இதில் இரு சக்கர வாகனத்துடன் அந்த நபர் பேருந்தின் அடியில் சிக்கியுள்ளார். இதை அடுத்து அங்கிருந்த பொதுமக்கள் பேருந்தின் அடியில் சிக்கிய நபரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் அந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சங்கரன்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியும் வருகின்றனர். விசாரணையின் போது உயிரிழந்த நபர் பத்தாவூர் பகுதியை சார்ந்த அப்தூர் கரீம் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் தனியார் பேருந்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய விபத்தின் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://player.vimeo.com/video/785695499?h=fdd306a564&badge=0&autopause=0&player_id=0&app_id=58479
  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…