தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா கடந்த 3 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இக்கோவிலின் 3ம் நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு சௌடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு முன்னாள் முதல்வரும், போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர் செல்வம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். ஒபிஎஸ்க்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் இருந்த பொதுமக்கள் அனைவரையும் சந்தித்தார். பின்பு பத்திரிகையாளர்கள் கேரளா அரசு புதிய அணை கட்டி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ்.
தமிழக அரசின் அனுமதி இல்லாமல் கேரள அரசு அணை கட்ட முடியாது. இது போன்று கேரள அரசு தொடர் நடவடிக்கையில் ஈடுபடும் பட்சத்தில் ‘அதிமுக உரிமை மீட்பு குழு கடுமையாக எதிர்ப்போம் என ஒபிஎஸ் பேட்டியளித்தார்.
மேலும் படிக்க: காவலரை டிக்கெட் எடுக்க சொன்னதால் பழிக்கு பழியா? NO PARKINGல் நின்ற அரசு பேருந்துக்கு அபராதம்.. நெட்டிசன்கள் விமர்சனம்!
மாண்புமிகு அம்மா இருக்கும் பொழுது முல்லைப் பெரியாறு அணையை 142 அடி அளந்து 152 அடி உயர்த்த சட்ட போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றார் என குறிப்பிட்டார்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.