கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்… பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கை!!

Author: Babu Lakshmanan
5 August 2022, 11:49 am

கேரளா : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலட்ர் விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கேரளாவில் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

இந்த நிலையில், கேரளாவில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக திருச்சூர், இடுக்கி, பத்தினம்திட்டா, கோட்டயம், ஆலப்புழா மற்றும் பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்றும் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 6 மாவட்டங்களுக்கு இயல்பை விட கூடுதலான மழை பொழிவு இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்திருப்பதால், பொதுமக்கள் தாழ்வான இடங்களில் இருந்து வெளியேறி, பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி ஆயிரக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  • kantara 2 release date update தசராவை குறிவைக்கும் காந்தாரா 2 …. கோலாகலமாக கொண்டாட காத்திருக்கும் ரசிகர்கள்..!
  • Views: - 519

    0

    0