வயநாடு நிலச்சரிவு – தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்; மாநிலங்கள் அவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்,…!!
Author: Sudha30 July 2024, 12:40 pm
வயநாடு – முண்டக்காய் பகுதியில் இன்று அதிகாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டது.வீடுகள், வாகனங்கள் மற்றும் கடைகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சுமார் 400 குடும்பங்கள் வெளியேற முடியாமல் அங்கு சிக்கி உள்ளதாக தெரிகிறது.
போலீஸார், தீயணைப்பு படையினர், வனத் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்,ராணுவமும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது.
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். நிலச்சரிவு மீட்புப் பணிகளுக்கு உடனே 5,000 கோடியை நிவாரண நிதியாக ஒதுக்க வேண்டும் என்றும் கேரள எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது.