சட்டை பாக்கெட்டில் திடீரென வெடித்து சிதறிய செல்போன்… உயிர்தப்பிய 70 வயது முதியவர் ; அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!

Author: Babu Lakshmanan
18 May 2023, 9:14 pm

கேரள மாநிலம் திருச்சூரில் 70 வயது முதியவரின் சட்டைப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்த சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் எலியாஸ். 70 வயதான இவர்,அப்பகுதியில் உள்ள டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரது சட்டப் பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், செல்போனை எடுத்து வெளியே வீசினார். இதனால் அவருக்கு எவ்வித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, செல்போன் வெடிப்பதற்கான காரணம்இ வெப்பமான காலம் என்பதாலா..? அல்லது செல்போனில் ஏதேனும் கோளாறா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • actress who starred with Ajith and Vijay is in a pathetic state படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. அஜித், விஜயுடன் நடித்த நடிகையின் பரிதாப நிலை!