தோண்டத் தோண்ட துயரம்: இழுத்துச் செல்லப்பட்ட உடல்கள்…. உயர்ந்து கொண்டே இருக்கும் பலி எண்ணிக்கை..!!

Author: Sudha
31 July 2024, 8:46 am

கடவுளின் தேசம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் கேரளா நம் அண்டை மாநிலமாக உள்ளது. இயற்கை எழில் மிகுந்து காணப்படும் கேரளாவில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. இதனால் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் சுற்றுலா சென்று வருகின்றனர்.

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நேற்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் முண்டகை, மேட்டுப்பட்டி, சூரல்மலை உள்ளிட்ட 3 பகுதிகளில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்த நிலையில் ஏராளமானவர்கள் மாயமாகி உள்ளனர்.

எஸ்டேட்கள் உள்ள இந்த இடங்களில் பொதுமக்கள் தங்கி பணியாற்றி வந்தனர். நள்ளிரவு 1 மணிக்கு தங்களின் வீடுகளில் தூங்கி கொண்டிருந்தபோது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் மண்கள் சரிந்து வீடுகள் மீது விழுந்த நிலையில் காட்டாற்று வெள்ளமும் குடியிருப்பு பகுதிகளுக்குள் சீறிப்பாய்ந்தது. இந்த நிலச்சரிவில் 1000க்கும் அதிகமானவர்கள் சிக்கி உள்ளனர். அதாவது சுமார் 500 வீடுகளில் வசித்து வந்தவர்கள் நிலச்சரிவில் சிக்கி உள்ளனர். இதையடுத்து ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியை தொடங்கி உள்ளனர். மீட்பு ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது கேரளா நிலச்சரிவில் சிக்கி – பலியானவர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக உடல்கள் 138 கி.மீ வரை இழுத்து செல்லப்பட்டு உடல் பாகங்கள் நிலம்பூரில் மீட்கப்பட்டுள்ளது.இந்த பெருந்துயரம் மக்கள் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…