இப்படியும் ஒரு போட்டோசூட்டா..? இணையத்தை கலக்கும் மணப்பெண்ணின் போட்டோஸ்… காரணத்தை கேட்டு பாராட்டும் பொதுமக்கள்..!!
Author: Babu Lakshmanan17 September 2022, 6:57 pm
கேரளாவில் வித்தியாசமாக மணப்பெண் ஒருவர் நடத்திய போட்டோசூட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
திருமணம் நிச்சயக்கப்படும் இந்த காலத்து ஜோடிகள், Pre-Wedding, Post-Wedding என விதவிதமான போட்டோசூட்களை நடத்துவது டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக, கேரளாவில் சொல்லவே தேவையில்லை. அவர்கள் எப்போதும் வித்தியாசமாக யோசிப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ப்ரீ வெட்டிங் போட்டோ சூட் அதிக பணம் செலவழிக்கும் புதிய துறையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், மணப்பெண் ஒருவர் நடத்திய போட்டோசூட் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. திருமணத்திற்காக மண்டபத்திற்கு நடந்து செல்லும் மணப்பெண் சாலையில் உள்ள குண்டு குழிக்கு முன்பு போட்டோ எடுத்துள்ளார்.
போட்டோ சூட் அவர்கள் திருமணத்திற்கு முதல் நாள் தான் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சேரும் சகதியுமாக இருந்துள்ளது. இதை பயன்படுத்திக் கொண்டு சாலையில் இருக்கும் பிரச்சினைகளை வெளிக்காட்டும் வகையாக அந்த பெண் டிரைவிங் போட்டோ சூட்டை சாலையில் எடுத்துள்ளார்.
சாலைகள் சரியாக இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாகவும், சமூகப் பிரச்சனைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இந்தப் போட்டோ சூட் அமைந்துள்ளது. திருமணப் பெண்ணின் வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கு குவிந்து வந்தாலும், இதுக்கெல்லாம் அளவே இல்லையா..? என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.