வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் நிதி: பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு…வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்!!

சென்னை: 2022-23ம் ஆண்டுக்கான தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டசபையில் வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதமற்ற இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் வேளாண் துறைக்கென்று தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேளாண் பட்ஜெட்டில் நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, பழவகைகள் உள்பட அனைத்து வகையான வேளாண் சார்ந்த பொருட்களின் சாகுபடிகளை அதிகரிப்பது, வேளாண் துறையின் மேம்பாடுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.

முன்னதாக, தமிழக அரசின் பொதுபட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.2,531 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்டாவில் 3.16 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது

இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க தேவையான நிதியுதவி அளிக்கப்படும்

முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்து வேளாண் தொழில் தொடங்க உதவி

59 மெட்ரிக் டன் பாரம்பரிய நெல் விலை உற்பத்தி செய்யப்பட்டுள்ளன

தமிழக விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு

கிராமங்களில் இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டத்திற்கு ரூ.300 கோடி ஒதுக்கீடு

நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் மானாவாரி நிலத்தொகுப்பு திட்டத்திற்கு ரூ.132 கோடி ஒதுக்கீடு

அறுவடைக்குப் பின் நடைபெறும் நெல் சாகுபடிக்கு ரூ.5 கோடி வழங்கப்படும்

15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வேளாண் கருவிகளை தொகுப்பு வழங்கப்படும்

அறுவடை செய்த தானியங்கள் மழையில் நனையாமல் காக்க 60,000 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியில் தார்ப்பாய் வழங்கப்படும்

செம்மரம், சந்தனம், மகோகனி உள்ளிட்ட மதிப்புமிக்க மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்

வடமாவட்டங்களில் ஒன்று, தென்மாவட்டங்களில் ஒன்று என 2 சிறுதானியச் சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் ஏற்படுத்தப்படும்

பருத்தி பயிரிடுவதை அதிகரிக்க நீடித்த நிலையான பருத்தி இயக்கம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

இயற்கை முறை பருத்தி சாகுபடி ஊக்குவிக்கப்படும் – வேளாண் துறையில் விதை முதல் உற்பத்தி வரை, அனைத்தையும் ஒருங்கே அறிந்து கொள்ளும் வகையில் பிரத்யேக செயலி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

UpdateNews360 Rajesh

Recent Posts

டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்

இன்னும் 3 நாள்தான் மாமே… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10…

17 minutes ago

என் மேலயே புகார் கொடுக்கறயா.. காவல் நிலையத்தில் புகுந்து நபரை செருப்பால் அடித்த எம்எல்ஏ! (வீடியோ)

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி. இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில்…

28 minutes ago

கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!

கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…

2 hours ago

சமையல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு : மத்திய அரசு அறிவிப்பு.. சாமானிய மக்கள் ஷாக்!

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…

2 hours ago

கள்ளக்காதலனை வைத்து நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்.. காக்கிச் சட்டைகளை கைக்குள் மடக்கிய ஹேமலதா!

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…

2 hours ago

“வாட் ப்ரோ? இட்ஸ் வெரி ராங் ப்ரோ”… விஜய்யின் வசனத்தை பேசி சீண்டிப்பார்க்கும் அஜித்?

மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…

2 hours ago

This website uses cookies.