இண்டியா கூட்டணி ஆதரவு கேட்ட குஷ்பு… எழுந்த சர்ச்சை : உடனே நடந்த TWIST!

Author: Udayachandran RadhaKrishnan
19 April 2024, 4:33 pm

இண்டியா கூட்டணி ஆதரவு கேட்ட குஷ்பு… எழுந்த சர்ச்சை : உடனே நடந்த TWIST!

சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு நடிகை குஷ்பு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அதன்பின், அங்கிருந்தபடியே குடும்பத்தினருடன் செல்பி எடுத்து தனது எக்ஸ் பக்கத்தில் அந்தப் புகைப்படங்களை பகிர்ந்தார்.

அதில், #Vote4india என அவர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதே ஹேஸ்டேகை கடந்த சில வாரங்களாக இண்டியா கூட்டணிக் கட்சியினர் பயன்படுத்தி வந்தனர். அப்படியிருக்கும் போது, குஷ்புவின் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குஷ்புவின் எக்ஸ் தள பதிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அவரின் பதிவுக்கு தி.மு.க., காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவித்து வருவது பா.ஜ.கவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நான் எதைச் செய்தாலும் அதை பிரச்னையாக்க வேண்டும் எனக் காத்திருக்கிறார்களா. இந்தியா என்பது நமது நாடு தானே. இதற்கு முன்பு பதிவிடும்போதெல்லாம் இப்படிப்பட்ட பிரச்னைகள் எதுவும் வரவில்லை. நமது நாட்டின் பெயர் இந்தியா.

அதைப் பதிவிடுவதில் எந்தக் குழப்பமும் இல்லை. என் நாட்டை இந்தியா என அழைக்கிறேன். எதிர்க்கட்சி கூட்டணியின் பெயர் இண்டியா. அதில் ஒவ்வொரு எழுத்துக்கும் இடையில் புள்ளி இருக்கும். நான் பதிவிட்டதில் புள்ளி இல்லையே? நான் எதைச் செய்தாலும் பிரச்னையை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள்.

குழப்பத்தை உண்டாக்க வேண்டும் என்று குழப்புகிறார்கள். ஆனால், நான் தெளிவாக இருக்கிறேன். நான் பா.ஜ.க,வில் இருக்கிறேன். என்னுடைய சமூகவலைதள பக்கத்தில் ‘மோடி பரிவார்’ என இருக்கிறது.

மேலும் படிக்க: உங்களுக்கு ஓட்டு இல்லை… வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி : வாக்காளர்கள் வாக்குவாதம்!

இதைப் பார்த்துவிட்டு சற்று அறிவுடன் செயல்பட வேண்டும். இண்டியா என்ற பெயரை மக்களை ஏமாற்றுவதற்காக எதிர்க்கட்சிகள் வைத்துள்ளார்களா? என கூறினார்.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!