நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

Author: Udayachandran RadhaKrishnan
15 May 2024, 4:59 pm

நாய் வாலை நிமிர்த்த முடியாது.. குஷ்பு வாய்ஸ் : மீண்டும் திமுகவில் இருந்து நீக்க முடிவு?!

திமுக பேச்சாளர் சிலர் வரம்பு மீறி பேசுவதும், அவதூறு கருத்து பேசி கட்சி மேலிடத்திடம் இருந்து வாங்கி கட்டிக் கொண்ட சம்பவம் அதிகம் அரங்கேறி வருகிறது. அப்படி திமுகவில் உள்ள முக்கிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்புவின் ரிப்ளை ஒன்று நெட்டிசன்கள் இடையே கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.

முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.

மேலும் படிக்க: சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் எடுத்த விபரீத முடிவு.. தன்னை தானே சுட்டுக் கொண்டதால் பரபரப்பு!

பின்னர் மக்களவை தேர்தலை முன்னிட்டு வருத்தம் தெரிவித்த அவர், தன்னை கட்சியில் சேர்க்குமாறு கோரிக்கை வைத்தார். இதையடுத்து அவரை மீண்டும் கட்சி மேலிடம் சேர்த்தது.சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

ஆனால் மீண்டும் மீண்டும் அவர் ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து இழிவாக பேசியிருந்தார். இதில் அவர் கைதாகி விடுதலையும் செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத் குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை கூறி பேசி இருந்தார். இந்த நிலையில்தான் வாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் போஸ்ட் செய்துள்ளார்.

அதில், ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்துள்ளார்.

இந்நிலையில் ராதிகா சரத்குமாருக்கு நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ ஆதரவாக பேசியுள்ளார். ராதிகாவின் எக்ஸ் பதிவை பகிர்ந்துள்ள அவர்,” நாய் வாலை நிமிர்த்த முடியாது என ஒரு பழமொழி உண்டு.. ஒவ்வொரு முறையும் இந்த மனிதன் தன்னை இந்த உலகத்திற்கு கொண்டு வந்த பெண்ணை அவமதிக்கிறார். அவருடைய வீட்டில் பெண்களின் அவல நிலையை கற்பனை செய்து பாருங்கள்.” என கூறியுள்ளார்.

குஷ்பு குறித்து பேசியதால் தான் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நீக்கப்பட்டு சிறை சென்றது குறிப்பிடத்தக்கது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!