கீழ்பவானி வாய்க்கால் உடைந்து வெள்ளம் : 30க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி தவிப்பதால் பரபரப்பு.. மீட்பு குழு விரைவு!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 10:10 pm

ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

ஈரோடு, கீழ்பவானி வாய்க்கால் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் பெருந்துறை அருகே உள்ள தனியார் துணி உற்பத்தி மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 30க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கி தவிப்பதாக மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்று மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள தனியார் மில்லையும் வெள்ளம் சூழ்ந்ததால் அங்கு பணிபுரியும் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கி தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர், நீண்ட நேரம் போராடி மில்லில் சிக்கி தவித்த தொழிலாளர்களை பத்திரமாக மீட்டனர்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!