தமிழகத்தை உலுக்கிய கொலைகள்.. எதிர்க்கட்சிகள் விமர்சனம் : காவல் ஆணையரை மாற்றிய திமுக அரசு!

Author: Udayachandran RadhaKrishnan
8 July 2024, 1:33 pm

சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஓராண்டாக பொறுப்பில் இருந்து வந்த சந்தீப் ராய் ரத்தோரை தற்போது இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதிய காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அருண் ஐபிஎஸ் முன்னதாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக பொறுப்பில் இருந்து வந்தார்.

சந்தீப் ராய் ரத்தோர் தற்போது காவல்துறை பயிற்சித்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதே போல, புதிய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த உத்தரவை தமிழக அரசு தற்போது பிறப்பித்துள்ளளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

முன்னதாக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், அதிமுக நிர்வாகி என அடுத்தடுத்து கட்சி பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டது எதிர்க்கட்சிகளிடையே பேசுபொருளானது.

இந்த கொலை சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் சட்டம் ஒழுங்கு மீது தங்கள் கண்டங்களை பதிவு செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!