கோடநாடு கொலை வழக்கு… எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி!!
Author: Udayachandran RadhaKrishnan12 December 2023, 4:51 pm
கோடநாடு கொலை வழக்கு… எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான உத்தரவு : உயர்நீதிமன்றம் அதிரடி!!
கோடநாடு வழக்கில் கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க விலக்கு அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகி நேரில் சாட்சியம் அளிக்க இயலாததால் வீட்டில் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க கோரியும் தாக்கல் செய்திருந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுபோன்று, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக்கோரியும், ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார் எடப்பாடி பழனிசாமி. இதனால் கோடநாடு வழக்கில் எடப்பாடி பழநிசாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு சமீபத்தில் இடைக்கால தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேரில் சாட்சியம் அளிக்க விலக்கு அளித்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் சாட்சியம் பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையர் கார்த்திகைபாலன் நியமனம் செய்யப்பட்டார். மேலும், சாட்சியப் பதிவை ஒரு மாதத்தில் வழக்கறிஞர் ஆணையர் முடிக்க வேண்டும் என்றும் வழக்கை மாஸ்டர் நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.