பாஜக இந்துக்களுக்கான கட்சியல்ல… உண்மையில் நாங்க தான்… கொளத்தூர் மணி சொன்ன விளக்கம்..!!

Author: Babu Lakshmanan
28 May 2022, 5:21 pm

பாஜக இந்துக்களுக்கான கட்சியல்ல என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழகம் தலைவர் கொளத்தூர் மணி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, அவர்கள் பேசியதாவது :- ஒற்றை தேசமாக உருவாக்க நினைக்கும் மத்திய அரசை கண்டித்து நாளை மதுரையில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் காளவாசல் பகுதியில் துவங்கி பழங்காநத்தம் பகுதியில் வரையில் செஞ்சட்டை பேரணி நடைபெற உள்ளது, தொடர்ந்து மாநாடு நடைபெறுகிறது. இதில் கூட்டமைப்பு சார்பில் உள்ள அரசியல் மற்றும் அமைப்புகள் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

செஞ்சட்டை பேரணி மற்றும் மாநாடு நாகை திருவள்ளுவன் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது. பாஜக அரசின் ஆட்சி மோசமான செயல்பாட்டில் உச்சத்தை நோக்கி செல்கிறது. எளிய மக்களுக்கான செயல்பாடுகளை பெரியாரிய கூட்டமைப்பு செயல்படுகிறது.

அண்ணாமலை பாஜக தலைவர் பொறுப்பேற்றதும் தமிழகத்தில் பாஜக வளர்ந்து விட்டதாக பிம்பத்தை உருவாக்கி வருகிறது. பிரதமர் பங்கேற்ற மேடையில் தமிழக முதல்வர் பல்வேறு கோரிக்கைகளையும், நடைமுறை படுத்தாத தீர்மானங்கள் முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாகதான் பார்க்க முடிகிறது. தமிழை மதிப்பதில்லை என்பதை தான் நிதின்கட்கரி எழுந்து நிற்ககாகதை காண்பிக்கிறது, எனக் கூறினார்.

கொளத்தூர் மணி பேசியதாவது :- பாஜக இந்துக்களுக்கான கட்சியல்ல. தலீத் மக்களும் இந்துக்கள்தான். ஆனால், அவர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டால் அவர்களை எதிர்க்கின்றனர். அவர் சிறுபான்மையளவு உள்ள இந்துக்களுக்கான கட்சியாக இருக்கின்றனர். நாங்கள் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, தலீத் என பெரும்பான்மை உள்ள இந்துக்களுக்கு ஆதரவாக உள்ளோம், எனக் கூறினார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 953

    0

    0