தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகன் : அதிரடி தண்டனை!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2024, 8:09 pm

தாயை கொலை செய்து உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட கொடூர மகனுக்கு சூப்பர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்து 7 வருடமாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி தனது 63 வயதான தாயை கொலை செய்துள்ளார் மகன் குச்சொரவி.

பின்னர் இறந்த தாயின் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளார். இதயத்தையும், விலா எலும்புகளையும் எண்ணெயின் வறுத்து சாப்பிட முயன்றுள்ளார்.

இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. சமைத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவருக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

இதையும் படியுங்க: லட்டு விவகாரம் குறித்து சிறப்பு விசாரணை தற்காலிகமாக நிறுத்தம் : உச்சநீதிமன்றம் கொடுத்த டோஸ்..!!

இந்த நிலையில் மரண தண்டனையை எதிர்ர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது இதை விட கொடூரமான வழக்கை நாங்கள் சந்தித்ததில்லை, குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை கொடுத்த மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.அதே சமயம் இவரை திருத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை என மரண தண்டனையை நீதிமன்றம் உறுதி செய்தது.

இருப்பினும் இந்த வழக்கில் குச்சொரவி மேல்முறையீடு செய்யத ஒரு மாத கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Kangana Ranaut Invites Priyanka Gandhi to watch Emergency movie எமர்ஜென்சி பார்க்க வாங்க.. பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்த பாஜக எம்பி!
  • Views: - 323

    0

    0