திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா பேச்சிற்கு கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்கள் சமீபத்தில் பேசிய பொதுக்கூட்டத்தில் “கலைஞர் பேனா போட்ட கையெழுத்தால் தான் கொங்கு வேளாளர் சமூகம் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ளனர். இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி வெள்ளமண்டி வைத்திருப்பார். அண்ணாமலை ஆடு மேய்த்துகொண்டு இருப்பார். வானதி சீனிவாசன் கூடை பின்னிகிட்டு இருப்பார் என பேசுகிறார்” ராசா’வின் தனிப்பட்ட அரசியல் விமர்சனத்துக்காக ஒட்டு மொத்த கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தையும் ஒப்பிட்டு பேசுவதும், ஆடு மேய்ப்பதும், வெள்ளமண்டி நடத்துவதும், வேளாண்மை செய்வதும் தரம் தாழ்ந்ததாக நினைத்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!
கொங்கு வேளாளர் சமூகம் சங்க காலம் தொட்டு வேளாண்மையை குல தொழிலாக கொண்டு – காட்டை திருத்தி காணி ஆக்கி, ஆற்று நீர் மேலாண்மை செய்து, ஏர் உழுது, விதைத்து ,அறுவடை செய்து,உணவு உற்பத்தி செய்யும் மகத்தான பணியை செய்து வாழ்ந்து வருகின்றனர். மனிதன் வேட்டை தொழிலில் இருந்து மாறி வேளாண்மை செய்ய தொடங்கிய இடத்தையே நாகரீக வளர்ச்சி ஏற்பட்டது. கொங்கு வேளாளர்கள் தமிழ் இனத்தின் வேளாண் நாகரீக வளர்ச்சிக்கு காரணமாக விளங்க கூடியவர்கள். ஆக வேளாண்மை செய்வதையும் அதன் சார்ந்த தொழில்கள் செய்வதை இழிவாக பேசுவது, எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அண்ணாமலை மீதும் அரசியல் ரீதியாக ஆயிரம் விமர்சனங்களை நீங்கள் வைக்கலாம் ஆனால் கொங்கு வேளாளர் சமூகம் மட்டுமே பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மொத்த ஒதுக்கீட்டையும் அனுபவிப்பதில்லை.
இன்னும் பல சமூகங்கள் இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்டவர் பட்டியலில் பங்கிட்டு கொள்கின்றனர். இட ஒதுக்கீட்டை மட்டுமே நம்பி பிழைக்கும் சமூகமாக கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகம் இல்லை! இதே சமூகத்தில் எந்த ஒரு இட ஒதுக்கீட்டு சலுகையும் கிடைக்காமல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் விவசாயம் செய்து வருகின்றனர். பள்ளி கல்வியை கூட வறுமையினால் நிறைவு செய்ய முடியாமல் தொழிலாளியாக தன் வாழ்க்கையை துவங்கி இன்று பல்வேறு தொழில் நிறுவனத்தின் உரிமையாளராக தமிழக அரசுக்கு வருவாய் ஈட்டக் கூடியவர்களாக எத்தனையோ கவுண்டர்கள் உள்ளனர். சமூக நீதி பேசுகின்ற திமுக அமைப்பில் இருந்து கொண்டு தனிப்பட்ட நபர்களை விமர்சிப்பதற்காக அவர்கள் சார்ந்த சமூகத்தையே விமர்சிப்பது தான் திராவிட மாடல் சமூகநீதியா? அல்லது சாதிய மோதலை தூண்டும் யுக்தியை திமுக கையிலெடுக்கிறதா?
மருத்துவர் இராமதாசு அவர்களையோ, முணைவர் திருமாவளவன் அவர்களையோ மருத்துவர் கிருஷ்ணசாமி அல்லது பிற தலைவர்களையும் அரசியல் சார்ந்து மாற்று கருத்து வைக்கும் போது அந்த சமூகம் குறித்து பேசி நாங்கள் இட ஒதுக்கீட்டை பெற்று தராவிட்டால் நீங்கள் இந்த தொழில் தான் செய்வீர்கள் என ராசா பேச முடியுமா? அப்படி பேசினால் திமுக தலைமை அனுமதிக்குமா? கொங்கு வேளாளர் சமூகம் எதிர்வினையாற்றாது என்ற தைரியமா? ஆ.ராசா நீலகிரி தனி தொகுதியில் வெற்றி பெற்றதும் கவுண்டர் சமூகத்தினர் வாக்குகளையும் பெற்று தான் என்பதை மறந்து விட்டு பேசுவது திமுக வாக்கு வங்கியையும் எதிர்காலத்தில் சீர்குழைக்கும் என்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும்.
ஆ.ராசா தனித்தொகுதியில் நின்றதே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் தானே? ஏன் அவர் பொது தொகுதியில் நிற்கவில்லை? குறிப்பாக கொங்கு வேளாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆ.ராசா பகிரங்கமாக மன்னிப்பு கோருவதோடு, தன் கருத்தை திரும்ப பெற வேண்டும்! தவறும் பட்சத்தில் ராசா கருத்துக்கு எதிர்வினையை கொங்கு வேளாளர் சமூகம் ஆற்றும். திமுக தலைமை ராசாவின் பேச்சை ஊக்கப்படுத்தும் பட்சத்தில் கொங்கு மண்டலத்தில் திமுக வாக்கு வங்கி சிதையும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், என தெரிவித்துள்ளார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.