தூத்துக்குடி ; கோவில்பட்டி அருகே சில்லாங்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சில்லாங்குளத்தில் முத்துக்கருப்பன் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி என்பவர் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இந்த நிலையில், அப்பள்ளியின் கழிவறையில் வைத்தீஸ்வரி நேற்றிரவு கயிற்றினால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வழக்குப்பதிவு செய்து மாணவியின் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், மாணவியின் மரணம் குறித்து தங்களுக்கு தெளிவான தகவல் பள்ளி நிர்வாகம் சார்பில் கொடுக்கவில்லை என்று மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் மாணவி வைத்தீஸ்வரி தங்கியிருந்த படித்த சில்லாங்குளத்தில் உள்ள விடுதியை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பள்ளி நிர்வாகம் மற்றும் அன்று பணியில் இருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, தாசில்தார் நிசாந்தினி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.
இதனிடையே, அமைச்சர் கீதா ஜீவனும் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது, மாணவி கைப்பட எழுதிய கடிதம் சிக்கியதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.