அதிமுக எம்எல்ஏ கே.பி.முனுசாமி உண்ணாவிரதம்: விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு..தனி ஒருவராக போராட்டம்..!!

Author: Rajesh
1 April 2022, 10:18 am

கிருஷ்ணகிரி: விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்.எல்.ஏவுமான கே.பி. முனுசாமி தாலுகா அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிராமப்பகுதிகளில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகபடுத்துவதாக குற்றசாட்டு எழுந்து வந்தது.

Image

இந்நிலையில் தொழிற்சாலைகள் அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதாக கூறி அந்த செயலை கண்டித்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ. வுமான கே.பி. முனுசாமி இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சூளகிரி தாலுகா அலுவலகம் முன்பு தனி ஒருவராக அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளார். 5 ஆயிரம் விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் ‘விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளின் நிலத்தை பறிக்காதே மாநில அரசே பறிக்காதே’ என்று குறிப்பிடப்பட்ட பதாகையுடன் தாலுகா அலுவலகம் முன் தனி ஒருவராக கே.பி. முனுசாமி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 1373

    0

    0