மகளிர் உரிமைத் தொகை பெண்களை ஏமாற்றும் செயல்… தேர்தல் வாக்குறுதியை ஏமாற்றி வருகிறது திமுக அரசு : கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு..!!!
Author: Babu Lakshmanan11 July 2023, 9:09 am
மகளிர் உதவித்தொகை பெண்களை ஏமாற்றம் செயல் என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ராமநாதபுரம் பாரதி நகரிலுள்ள தனியார் மஹாலில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது, அவர் கூறியதாவது :- தமிழகம் முழுவதும் அரசு மதுபானக் கடைகளை அடைத்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி வரும் ஜூலை 15ஆம் தேதி மாநிலம் தழுவிய மது பாட்டில்கள் உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் என்பது பெண்களை ஏமாற்றும் செயல். இதை வன்மையாக கண்டிக்கிறோம். கொடுத்தால் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியை ஏமாற்றி வருகிறது திமுக அரசு, என தெரிவித்தார்.