நெஞ்சை பதற வைக்கும் ஆணவக்கொலை.. விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிவிட்டது : இபிஎஸ் வேதனை!!

Author: Babu Lakshmanan
22 March 2023, 9:43 am

அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிவிட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் (28) என்பவர் டைல்ஸ் வேலை செய்து வந்தார். இவர் அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெண்ணின் பெற்றோருக்கு பிடிக்கவில்லை.

நேற்று மதியம் ஜெகன் கிட்டம்பட்டியில் இருந்து டைல்ஸ் வேலை செய்வதற்கு காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜெகனை வழிமறித்த சரண்யாவின் தந்தை சங்கர் உள்பட உறவினர்கள் சிலர், ஜெகனை தாக்கி, அவரது கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர்.

நடுரோட்டில் வைத்து இளைஞர் ஒருவர் ஆணவக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில, ஆணவக் கொலைகளை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த ஆணவக்கொலை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கிருஷ்ணகிரியில் பட்டப்பகலில், நடுரோட்டில் இளைஞர் கழுத்தறுத்து ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது.

https://twitter.com/EPSTamilNadu/status/1638192648044580865

அரசியல் கொலை, ஆதாயக்கொலை, ஆணவக்கொலை என குற்றவாளிகள் அச்சமின்றி வாடிக்கையாக செயல்படும் இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடே கொலைக்களமாக மாறிப் போயிருப்பது வேதனைக்குரியது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Soundarya Death Case rumors ’செளந்தர்யா திட்டமிட்டு கொலை’.. மாளிகையே காரணம்.. பரபரப்பு கடிதம்!