பெண் தோழியுடன் இருக்கும் இன்பநிதியின் புகைப்படம் வைரல் : கிருத்திகா உதயநிதி கொடுத்த ரியாக்ஷன்..!!

Author: Babu Lakshmanan
5 January 2023, 2:32 pm

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மகன் இன்பநிதி தன்னுடைய பெண் தோழியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அது தொடர்பாக அவரது தாய் கிருத்திகா உதயநிதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினின் அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் இடம்பெற்றார். அவருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் உதயநிதியின் மகனுமான இன்பநிதி கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இவர் கால்பந்து போட்டிக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளிநாடு சென்றிருந்தார். தனது பேரனை முதலமைச்சர் ஸ்டாலினே விமான நிலையம் சென்று வழியனுப்பி வைத்தார்.

உதயநிதி தமிழக அமைச்சராக்கியதால் வாரிசு அரசியல் என விமர்சனங்கள் எழுந்த நிலையில், உதயநிதியின் மகன் இன்பநிதியே அரசியலுக்கு வந்தாலும் அதனை வரவேற்போம் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார். இதையடுத்து, அந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன.

இந்த நிலையில், இன்பநிதி தனது பெண் தோழியோடு நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எதிர்கட்சியினர் இதனை பகிர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இது தொடர்பாக, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் தரப்பில் இருந்து எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், இந்த புகைப்படத்திற்கு பதில் அளிக்கும் வகையில் இன்பநிதியின் தாயார் கிருத்திகா உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அன்பு செய்யவும் , வெளிப்படுத்தவும் அச்சப்படாதே. இயற்கையை அதன் முழுத் தன்மையில் புரிந்து கொள்ள இது ஒரு வழியாகும், என தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 1026

    0

    0