ம…று இப்படி காரை ஓட்ட நீ யாருடி : பெண்ணை அறுவருக்கத்தக்க வார்த்தையில் பேசிய கேஎஸ் அழகிரி மகள் மற்றும் பேரன்.. அதிர்ச்சி வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan2 October 2022, 10:36 am
சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (22) இவர் தனது தங்கை மற்றும் தாயுடன் அண்ணா நகரில் இருந்து அசோக் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று சுபாசின் காரை முந்தி சென்றது, முன்னும் பின்னும் உரசிச் செல்லும் படி வந்ததால், சுபாசுக்கும் காரில் இருந்த பெண்ணுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு கால்களும் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன.
காரில் இருந்த பெண் உடனே போனில் ஒருவருக்கு தகவல் கூறினார், சிறிது நேரத்தில் ஒரு நபர் மதுபோதையில் அங்கு வந்தார். அந்த நபர் சுபாஷ் மற்றும் அவரது தங்கை தாயை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது.
இதனால் சுபாஷ்க்கும் அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அதில் மதுபோதையில் இருந்த அந்த நபர் சுபாஷை தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சுபாஷ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் தாக்கப்பட்ட சுபாஷ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் பேரன் என்பது தெரிந்தது.
மது போதையில் இருந்த நபர் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் என்பது தெரிந்தது. காரில் சென்ற பெண் கண்ணன் ஐஏஎஸ்சின் உறவுக்காரப் பெண் என்பதும் விசாரணையில் தெரிந்தது. இதில் இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதினர்.
இந்த நிலையில் இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளக்ளல் பரவி வைரலானது. அந்த வீடியோவில் கேஎஸ் அழகிரி பேரன் ஆபாசமான வார்த்தையில் அந்த பெண்ணை திட்டுவதும் பதிவாகியது.
இந்நிலையில் தனது பேரனை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய கே.எஸ் அழகிரி கூடுதல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கண்ணன் ஐஏஎஸ் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரிக்க மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
விஜயலட்சுமியின் காரை ஓட்டிவந்த கண்ணனின் கார் ஓட்டுநர் முத்துமணி என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், விஜயலட்சுமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு ஐஏஎஸ் அதிகாரியை தரக்குறைவாக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரின் பேரன் பேசுவது குறித்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
INC leader K.S. Azhagiri Daughter and Grandson abusing IAS’s wife. Mother keeps quiet when her son speaks abusive to the lady in the car. This is how Dynasty Rule will be. pic.twitter.com/J9YPkz4SrJ
— Gayathri Raguramm 🇮🇳🚩 (@BJP_Gayathri_R) October 1, 2022
தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி ஆட்சி நடந்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்களின் மகள் மற்றும் பேரன் பொதுவெளியில் அநாகரீகமாக நடந்து கொண்ட வீடியோவை ட்விட்டரில் பதிவிட்டு பாஜக பெண் பிரமுகர் காய்த்ரி ரகுராம் விமர்சித்துள்ளார்.