சென்னை புழல் சிறையில் கே.டி. ராகவன்… என்னாச்சுனு தெரியுமா? மீண்டும் களத்தில் குதிக்க தயார்!!

Author: Udayachandran RadhaKrishnan
8 November 2023, 9:23 pm

சென்னை புழல் சிறையில் கே.டி. ராகவன்… என்னாச்சுனு தெரியுமா? மீண்டும் களத்தில் குதிக்க தயார்!!

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பெறுப்பேற்ற நிலியல் 2021ஆம் ஆண்டு ஆபாச வீடியோ சர்ச்சையில் கே.டி. ராகவன் சிக்கினார்.

பின்னர் பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகிய அவர் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். அந்த சமயம் கே.டி.ராகவன் உடல்நிலை பாதிக்கப்பட்ட போது அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

அதே போல கே.டி.ராகவன் நடத்திய புதுமனை புகுவிழாவில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் நேரில் சென்று வாழ்த்தியிருந்தனர்.

நேரடியாக அரசியலில் ஈடுபடாமல் இருந்து கே.டி.ராகவன், அவ்வப்போது சமூகவலைதளங்களில் பாஜக தலைவர்களின் பதிவுகளை பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் ஒரு படத்துடன் பதிவை வெளியிட்டுள்ளார் கே.டி. ராகவன். அதில், சென்னை புழல் மத்திய சிறையில் பல்வேறு வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு இருக்கும் பாஜக பொறுப்பாளர்களை இன்று சந்தித்தோம்…

உடன் மாநில செயலாளர் S.G.சூர்யா.. மாநில இளைஞரணி பொது செயலாளர் மோகன் மற்றும் இளைஞரணி சகோதரர்களுடன் முன்னாள் மாவட்ட தலைவர் சென்னை சிவா என்று மட்டும் பதிவிட்டுள்ளார். ஆனால் சென்னை புழல் மத்திய சிறையில் உள்ள பாஜக நிர்வாகிகளான அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் பெயரை கே.டி.ராகவன் தமது பதிவில் குறிப்பிடவில்லை.

பொதுவாக பாஜக பொறுப்பாளர்களை மட்டுமே சந்தித்தேன் என கே.டி.ராகவன் தமது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…