இதுதான் சட்டம் ஒழுங்கா..? ரொம்ப நாளாக தூக்கத்தில் இருக்கும் CM ஸ்டாலின்.. யாராவது உண்மை போட்டோவை காட்டுங்க ; குஷ்பு விமர்சனம்!!

Author: Babu Lakshmanan
14 February 2023, 11:49 am

ரொம்ப நாளாக தூக்கத்தில் இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினை யாராவது தட்டி எழுப்புங்க என்று பாஜக பிரமுகர் குஷ்பு விமர்சித்துள்ளார்.

கோவையில் 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இரு கொலைகள் அரங்கேறியிருப்பது தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நீதிமன்றத்தில் கையெழுத்திட வந்த இளைஞரை நீதிமன்ற வளாகத்தின் பின்புறம், மக்கள் நடமாட்டம் அதிகம் இருந்த பகுதியில் வைத்து 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி கொன்றது.

இந்த கொலை செய்த பிறகும் அந்த கும்பல் சர்வ சாதாரணமாக நடைபோட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. இது தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பட்டப்பகலில் நடைபெற்ற கொலை சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து இருந்தனர்.

இந்தநிலையில், பாஜக நிர்வாகி குஷ்பு வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது :- கோவை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கற்ற நிலை உள்ளதாக தெரிவித்த அவர், யாராவது அவரை முதல்வர் ஸ்டாலினை எழுப்பி உண்மையான படத்தைக் காட்ட முடியுமா? நீண்ட நாட்களாக உறக்கத்தில் இருந்துள்ளார், என குஷ்பு விமர்சித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி