அரசு பேருந்தில் பயணம் செய்த போது பிரசவ வலி.. ICU போல மாற்றிய மருத்துவக்குழு : குவியும் பாராட்டு!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2024, 12:13 pm
Kerala
Quick Share

திருச்சூர் மலப்புரத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவருடன் திருச்சூரில் இருந்து கோழிக்கோடு தொட்டில்பாலம் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அப்பெண்ணுக்கு வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர், பேருந்தை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

மேலும், சம்பவம் குறித்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருந்த போதிலும் பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், பேருந்தில் இருந்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்ல போதிய நேரம் இல்லாததால் அப்பேருந்திலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் பேருந்துக்குள் சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் பேருந்து நிற்கும் இடத்திற்கே கொண்டு வரப்பட்டது.

மேலும் படிக்க: குமரி வரும் பிரதமரை யாரும் பார்க்க வரவேண்டாம்.. அண்ணாமலைக்கு ஒதுக்கிய அறை ரத்து!

இதையடுத்து நடைபெற்ற சிகிச்சையில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனைக்குள் அழைத்து செல்லப்பட்ட தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

இது தொடர்பான வீடியோக காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும், அரசு பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தையும், மருத்துவர்கள், செவிலியர்களின் பணியையும் பாராட்டி வருகின்றனர்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 199

    0

    0