கேட்ட பணத்தை கொடுக்கலைனா FIR போட்டு மானத்தை வாங்கிருவேன் : லேடி ரவுடி போல் மிரட்டிய காவல் ஆய்வாளருக்கு ஆப்பு வைத்த கமிஷ்னர்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 August 2022, 10:18 am

சென்னை நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் நகைக்கடையில் மேலாளராக பணிபுரிந்து வருபவர் சிவகுமார். இவரின் கடைக்கு கடந்த 10ம் தேதி நுங்கம்பாக்கம் காவல் துறையினர் எனக்கூறி வந்த இருவர், திருட்டு வழக்கில் நேபாள பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் உங்கள் கடையில் வாங்கப்பட்டது என கூறியுள்ளார்.

நுங்கம்பாக்கம் குற்றப்பிரிவு காவலர் எனக்கூறிய அவர்கள், 2 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டுள்ளனர். அப்படி தராவிட்டால் முதல் தகவல் அறிக்கையில் கடையின் பெயரை சேர்த்து களங்கம் ஏற்படுத்துவோம் என கூறி மிரட்டி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதன்பேரில் குற்றப்பிரிவு காவலர்கள் மெல்வின் மற்றும் தங்கராஜ் ஆகிய 2 காவலர்களிடம் விசாரணை நடத்தியதோடு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். மேலும், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரோகிணியிடம் விசாரணை நடத்தப்பட்டதை அடுத்து அவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!