சென்னையில் திமுக எம்பி பங்கேற்ற கூட்டத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் பொதுக் கூட்டத்தில் எம்பி கனிமொழி கலந்து கெண்டு உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் பெண் காவலர் ஒருவர் ஈடுபட்டிருந்தார். அப்போது, தி.மு.க நிர்வாகிகளான ஏகாம்பரம் மற்றும் பிரபு ஆகிய இருவரும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதையறிந்த போலீசார், உடனடியாக அவர்கள் இருவரையும் கைது செய்ய முயன்றனர். ஆனால், தி.மு.க.வினர் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்தி, அவர்களை கைது செய்ய விடாமல் தடுத்து அனுப்பினர்.
திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்ட கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுக நிர்வாகிகள் பாலியல் தொல்லை கொடுத்திருப்பது பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் எழச் செய்துள்ளது.
இந்த நிலையில், பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்ய விடாமல் தடுத்த சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “சென்னை விருகம்பாக்கத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரை இரண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகள் பாலியல் தொந்தரவு கொடுத்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர்களை கைது செய்ய முற்பட்ட காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டது உச்சகட்ட அவலம்.
மேடைகளில் பெண்களை ஆபாசமாக பேசுவது திமுகவுக்கு வாடிக்கையாக இருந்தாலும், திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி திமுக எம்பி கனிமொழி அவர்கள் பங்கேற்ற பொதுக் கூட்டத்திலும் இவ்வாறு திமுக நிர்வாகிகள் நடந்து கொண்டது அதிகார மமதையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.
இந்த பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு திமுக நிர்வாகிகளையும் கைது செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் சுற்றுலா மாளிகையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார், அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட…
வெற்றி இயக்குனர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கோலிவுட்டில் சுந்தர் சி வெற்றி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கிய…
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் ரவீனா தாஹா. தொடர்ந்து சீரியல்களில் கமிட் ஆனார். இவர் ஜீ…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலமாக வலம் வருகிறார் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி பங்காரம்”…
சிலிக் ஸ்மிதா என்று சொன்னால் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிடும். பழகுவதற்கு இனிமையா நபர் என பிரபலங்கள் போற்றப்படும் சிலிக்…
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
This website uses cookies.