இடத்தகராறில் வேலிக்கு தீவைத்த திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர்.. குடியிருப்புவாசியை ஓடஓட விரட்டி அடித்து அட்டகாசம்..!!
Author: Babu Lakshmanan7 October 2022, 11:34 am
மயிலாடுதுறை ; சீர்காழி அருகே இடத்தகராறில் வேலிக்கு தீவைத்து, குடியிருப்புவாசியை திமுக ஊராட்சிமன்ற தலைவரின் கணவர் விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீர்காழியை அடுத்த காத்திருப்பு கிராமத்தில் ஊராட்சிமன்ற தலைவராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த அன்புமணி. இவரது கணவரும், முன்னாள் திமுக ஊராட்சிமன்ற தலைவருமான மணிமாறனும், அவரது மகன்களும், பிரகலாதன் என்பவரின் இடத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், மணிமாறனும், அவரது மகன்களும் சேர்ந்து பிரகலாதனின் இடத்தை சுற்றியுள்ள வேலியை தீவைத்து கொளுத்தினர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, பிரகலாதனை கட்டையால் ஓடஓட விரட்டி அடித்துள்ளார் மணிமாறன். இதில், பலத்த காயமடைந்த அவர் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவரின் இந்த அட்டகாசம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.