தரையிறங்கிய சந்திரயான் 3 விண்கலம்.. நிலவின் முதல் புகைப்படத்தை வெளியிட்டது!!!

Author: Udayachandran RadhaKrishnan
23 ஆகஸ்ட் 2023, 8:54 மணி
chand - Updatenews360
Quick Share

கடந்த ஜூலை 14-ம் தேதி, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்ணில் பாய்ந்த சந்திரயான்-3 விண்கலம், பல்வேறு கட்டங்களாக நிலவை சுற்றி வந்தநிலையில், சற்று முன் (6.04) மணி அளவில் நிலவின் தரையில் வெற்றிகரமாக கால் பதித்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

இப்போது, சந்திரயான் -3 நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் பணி வெற்றி பெற்றதால், உலகின் முதல் நாடு என்ற பெருமையையும், நிலவில் கால் பதித்த நான்காவது நாடு இந்தியா என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்நிலையில், பெங்களூருவில் இருக்கும் தரை கட்டுப்பாடு மையத்துடன் சந்திராயன்-3 லேண்டரின் தொடர்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது.

மேலும், லேண்டர் கிடைமட்ட வேகக் கேமராவில் நிலவில் இறங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இஸ்ரோ வெளிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட பதிவில், “சந்திராயன்-3 லேண்டர் மற்றும் பெங்களூரு தரை கட்டுப்பாடு மையத்துடன் (MOX-ISTRAC), இடையே தொடர்பு இணைப்பு நிறுவப்பட்டுள்ளது.”என்று பதிவிட்டுள்ளது.

  • Woman Aghori ஒட்டுத் துணியில்லாமல் கோவிலுக்குள் நுழைந்த பெண் அகோரி… அனுமதி மறுப்பால் தீக்குளிக்க முயற்சி!
  • Views: - 380

    0

    0