ஜெயிலர், ஜவானின் சாதனையை தூக்கி சாப்பிட்டதா லியோ..? முதல் நாள் வசூல் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு..!!

Author: Babu Lakshmanan
20 October 2023, 6:39 pm

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் லியோ படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

leo-movie-updatenews360

லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அதோடு, அதிகாலை 4 மணி மற்றும் 7 காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று வெளியான லியோ திரைப்படத்தை ரசிகர்கள் ஆராவாரத்துடன் வரவேற்றனர். தியேட்டர்களில் திருவிழா கோலம் பூண்டது. படம் வெளியாவதற்கு முன்பே முதல் நாளில் வசூல் சாதனை படைக்கப்போவதாக ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், லியோ திரைப்படம் ரூ.148.5 கோடியை வசூலித்து இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய இந்திய திரைப்படம் என்ற சாதனை படைத்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது, ரஜினிகாந்த்தின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் உள்ளிட்ட படங்களின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முதல் நாளே ரூ. 140 கோடி வசூல் என்பது விஜய் மற்றும் லோகேஷ் கனராஜுக்கு இதுவே முதல் முறையாகும். லியோ படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 30 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, விஜய்யின் கோட்டையான கேரளாவில் ரூ. 11 கோடியும், கர்நாடகாவில் ரூ. 14 கோடியும், ஆந்திரா, தெலுங்கானாவில் ரூ. 15 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

  • Enforcement Directorate raids famous actor's house.. Arrest soon?பிரபல நடிகர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு.. விரைவில் கைது? ரூ.5.90 கோடி பறிமுதல்!