பல உயிர்களை இழந்த பின்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? மக்களை திரட்டி போராடுவோம்.. திமுக அரசுக்கு இபிஎஸ் எச்சரிக்கை!!

அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:- தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் ஆட்சியாளர்களின் பண பசிக்கு பல உயிர்கள் பலியிடப்பட்டு வருகின்றன. கொலை, கொள்ளை, ஆயுதங்கள், போதை மருந்து கடத்தல் மற்றும் ‘ஆன்லைன்’ சூதாட்டங்களால் கடந்த ஓராண்டில் நாடும், நாட்டு மக்களும் சீரழிந்து, சீர்குலைந்துபோய் இருக்கிறார்கள். ‘ஆன்லைன்’ ரம்மி சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதை கண்டு, அந்த சூதாட்டத்தையே தடை செய்து அ.தி.மு.க. அரசு சட்டம் இயற்றியது.

தி.மு.க. அரசு நீதிமன்றத்தில் முறையாக, மூத்த வக்கீல்களை வைத்து வாதாடாமல் இருந்ததால், ‘ஆன்லைன்’ சூதாட்டம் நடத்தும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான தீர்ப்பினை பெற்றதால், ‘ஜாம் ஜாம்’ என்று ‘ஆன்லைன்’ சூதாட்டம் தற்போதும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, பணம் இழந்தவர்களின் தற்கொலையும் தொடர்கிறது. ‘ஆன்லைன்’ ரம்மி தடை சட்டத்தை எப்படி கொண்டுவரலாம் என்று ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை அளித்த பின்னரும், இன்னும் தடை சட்டம் பிறப்பிக்கப்படவில்லை.

ஆன்லைன்’ ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்தவுடன் ‘ஆன்லைன்’ ரம்மி போன்ற ‘ஆன்லைன்’ விளையாட்டுகளுக்கு உடனடியாக தடை சட்டத்தை அமல்படுத்தக்கோரி பலமுறை நான் வலியுறுத்தினேன். தி.மு.க. அரசு தாமதிக்கும் ஒவ்வொரு நாளும், ‘ஆன்லைன்’ ரம்மி போன்ற விளையாட்டு உரிமையாளர்கள் அதிக அளவில் தமிழக மக்களிடமிருந்து பணம் ஈட்டுவதும், பணத்தை இந்த தமிழக இளைஞர்கள், பண நஷ்டத்தை தாங்கமுடியாமல் தங்களது இன்னுயிரை இழப்பதும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. ஏற்கனவே 7.5.2022 அன்று ‘ஆன்லைன்’ சூதாட்டத்தால் பணம் இழந்த அம்பத்தூரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் சரவணக்குமார் தற்கொலை செய்துகொண்டார்.

‘ஆன்லைன்’ சூதாட்டத்தில் பல்லாயிரம் கோடிகள் தினசரி புரள்கின்றன. ஆட்சியாளர்கள், சூதாட்ட நிறுவனங்களுடன் கைகோர்த்துக்கொண்டு நாள்தோறும் பல கோடி ரூபாய்களை கமிஷனாக பெற்றுக்கொண்டு, ‘ஆன்லைன்’ சூதாட்ட தடை சட்டத்தை இயற்றாமல் இருக்கின்றனர் என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ‘ஆன்லைன்’ சூதாட்டம் முதல் அனைத்து நாசகார செயல்களையும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை தி.மு.க. அரசு உடனடியாக எடுக்கவேண்டும். இல்லையென்றால் அப்பாவி மக்களின் உயிரை, உடமைகளை காக்கவும், தமிழக அரசை சட்ட ரீதியில் அகற்றவும் அ.தி.மு.க. மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…

2 minutes ago

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…

6 minutes ago

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

1 hour ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

3 hours ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

3 hours ago

மனைவியின் தகாத உறவால் கணவர் கொலை.. விசாரணையில் வெளியான மற்றொரு சம்பவம்!

சிவகாசியில், மனைவியின் தகாத உறவைத் தட்டிக் கேட்ட கணவர் கள்ளக்காதலன் உள்ளிட்ட 4 பேரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…

3 hours ago

This website uses cookies.