15 நாள் டைம் தரோம்.. பல நூறு கோடி ஊழல்… திமுக ஆட்சியால் ஆபத்து : அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2023, 8:15 pm

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 25ஆம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகிளீரணி தலைவர் வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம், விஷ்வஹிந்பரிசித் மாநில பொது செயலாளர் லக்ஷ்மன் நாராயணன், பாஜக மாநில துணை தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பதிவுத்துறையில் பல நூறு கோடி கையூட்டு நடைபெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் முதல்வருக்கும் அவர்களுக்கும் தொடர்பு உள்ளதா என கேள்வி எழுப்பினார். பாஜக 15 நாள் டைம் தருகிறது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போஸ்டர் அடித்து ஒட்டுவோம். கைது செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளளோம். மட்டன் கொடுக்கின்றனர் புடவை கொடுக்கின்றனர்.

திருமங்கலம் அரவக்குறிச்சி மாடல் எல்லாம் தேர்தல் வேலை நடைபெறுகிறது. கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளோம். ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் ஆடியோ வெளியிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

பிரதமரின் பேச்சுக்கு முதல்வர் சொல்கிறார் கற்பனை என்று. தமிழக அரசுக்கு உள்ள ஒரே அக்கறை ஈரோடு ஜெயிக்க வைக்க வேண்டும் என்று. அனைத்து துறையும் செயல்படாமல் உள்ளது.

சிபி ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆனதற்கு மகிழ்ச்சி. வரும் 17ஆம் தேதி பொறுப்பேற்கிறார். நாளை பிரிவு உபசார நிகழ்வு நடைபெறுகிறது. கோவை மக்களுக்கு நன்றி.

கோவையில் துப்பாக்கி கலாச்சாரம். எஸ்.பி.ஆபீஸ் பக்கத்தில் ஓட ஓட வெட்டுவது. இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மந்திரி வேட்டி சேலைக்கு பணம் கொடுக்க சுற்றி வருகிறார். இவர்கள் மீது கோவை மக்கள் வருத்தத்தில் உள்ளனர்.

சமூக நீதிப் பேசும் உங்களை கவர்னர் ஆழ்ந்து பார்த்து வருகிறார்.
சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் சொல்கிறோம்.
இப்படி ஆட்சி நடந்தால் சாமானிய மக்களுக்கு ஆபத்து.

காவல்துறையை சுதந்திரமாக செய்ய விடுங்கள். தண்டனை உயர்த்துங்கள். மூடி மறைக்காதீர்கள். உண்மையை சொல்லி தண்டனை கொடுங்கள்.

காவல்துறை பொய்யான செய்தி பத்திரிக்கைக்கு தருகின்றனர்.
பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து வருகின்றனர். அதில் அதிமுக தலைவர்கள் வருவார்கள்.

எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும். பாஜக பொதுக் கூட்டத்தில் ஓபிஎஸ் வருவாரா என்ற கேள்விக்கு ஆலோசனை செய்வதாக தெரிவித்தார்

நெடுமாறன் அய்யா தொடர்ந்து இது போன்று பேசுகிறார். இலங்கையின் பல பகுதிகள் மோடி அய்யாவை நம்பியுள்ளது. டெவலப்மெண்ட் ப்ராஜெக்ட்டில் மோடி அய்யாவை நம்பி உள்ளனர்.

13 வது அமர்மெண்க்கான நேரம் வந்து விட்டது. இலங்கை பிரச்சனையை தீர்க்க ஒரே தலைவர் மோடி ஐயா.. காங்கிரசும் திமுகவும் எந்த விதத்தில் கூட உகந்த கூட்டணி அல்ல.

பிஜேபியை பொறுத்தவரை 2009க்கு பிறகு நடக்கக்கூடிய சூழலுக்கு போய்க்கொண்டு உள்ளோம். அரசாக சொல்லும்பொழுது ஏற்றுக்கொள்ளலாம். நெடுமாறன் 2009ல் என்ன சொன்னாரோ அதைத்தான் சொல்கிறார்.

இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியும் என்றால் அது மோடியால் தான் என்று நெடுமாறன் தெரிவித்திருந்தார். பிபிசி மீது வருமானவரித்துறை சோதனைக்கு காரணம் இல்லை. அதிகாரிகள் எவிடன்ஸ் அடிப்படையில் சோதனை செய்கிறார்கள் என கூறினார்.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 419

    0

    1