உதயநிதி பதவியேற்பு விழாவுக்காக இபிஎஸ்க்கு போன கடிதம்.. ஓரங்கட்டப்பட்டாரா ஓபிஎஸ்? ட்விஸ்ட் வைத்த திமுக!!

Author: Udayachandran RadhaKrishnan
13 December 2022, 1:10 pm

உதயநிதி ஸ்டாலின் நாளை காலை அமைச்சராக்க பதவியேற்க உள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

நாளை அமைச்சராக உள்ள நிலையில் அவரின் பதவி ஏற்பு விழாவிற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இன்று கூட எடப்பாடி பழனிசாமி சேலத்தில், குடும்ப ஆட்சி, வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி போல செயல்படுகிறது. உதயநிதிக்கு நாளை முடிசூட்டு விழா நடக்கிறது. கருணாநிதி, ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதியை தலைமைக்கு கொண்டு வர முன்னோட்டம் பார்க்கிறார்கள். அவர் அமைச்சர் ஆனால் தமிழ்நாட்டில் தேனாறும் பாலாறும் ஓடப்போகிறதா?. வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் அவருக்கு அழைப்பு சென்றுள்ளது. ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு சென்றதா என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ