மகாராஷ்டிராவில் நடந்தது போல தமிழகத்தில் நடக்கலாம் : டிவிஸ்ட் வைத்த பாஜக பிரமுகர் சசிகலா புஷ்பா!!
Author: Udayachandran RadhaKrishnan3 July 2022, 8:43 pm
திமுக தொடர்ந்து மத்திய அரசு திட்டங்களை எதிர்த்து வருவதால் எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது நடக்கலாம் என பிஜேபி மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா தெரிவித்தார்.
தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகி மூலம் புதியதாக தொடங்கப்படுள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழாவில் பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு புதிய விளையாட்டு அரங்கை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, இளைஞர்களை வலுபடுத்தும் நோக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மைதானங்கள் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தலின்படி திறக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில் இறகு பந்து உள்விளையாட்டு அரங்கம் தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
மத்திய அரசு திட்டங்களை தொடர்ந்து திமுக மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது ஆகையினால் பிஜேபி தலைவர் அண்ணாமலை திமுக அமைச்சர்களின் ஊழல்களை அம்பலப்படுத்தி வருகிறார்.
ஆகையினால் எப்போது வேண்டுமானாலும் மகாராஷ்டிராவில் நடந்தது போல் தமிழகத்திலும் நடக்கலாம் என பிஜேபி மாநிலத் துணைத் தலைவர் சசிகலா புஷ்பா செய்தியாளரிடம் தெரிவித்தார்.