தின்பண்டம் சாப்பிட ஆசை ஆசையாய் பிரிட்ஜை திறந்த சிறுமி:எமனாக மாறிய ஃப்ரிட்ஜ்: துடிதுடித்து இறந்த கொடுமை…!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் ஃப்ரிட்ஜில் இருந்து மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி நேதாஜி தெருவைச் சேர்ந்தவர்கள் கௌதம்-பிரியா தம்பதி இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் இவர்களில் மூத்த பெண் குழந்தை ரூபவதி(5) தன் அம்மாவிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுவிட்டு தின்பண்டம் ஏதாவது இருக்கிறதா என தேடுவதற்காக ஃப்ரிட்ஜை திறந்து உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி அம்மா என்ற அலறல் சத்தத்துடன் கீழே விழுந்துள்ளார்,சிறுமி பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார்.

உடனடியாக சிறுமியை மீட்ட பெற்றோர் ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.இதைக் கேட்ட பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.சிறுமியின் மழலைக் குரலை இனி எப்போது கேட்போம் என அக்கம்பக்கத்தினரும் உடைந்த மனதுடன் தெரிவித்தனர்.

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இனியும் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் தவிர்க்க ஃப்ரிட்ஜை அடிக்கடி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் மேலும் பிரிட்ஜின் கம்ப்ரசர் பழுதாகி உள்ளதா? அதன் குழாயில் ஏதாவது அடைப்பு உள்ளதா? என்பதை அடிக்கடி பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டும் ஏனெனில் கம்ப்ரஸர் பழுதானால் மின்கசிவு பிரிட்ஜ் வெடிப்பது போன்ற அபாயகரமான நிகழ்வுகள் ஏற்படும் என டெக்னீஷியன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Sudha

Recent Posts

நண்பனின் தங்கைக்கு மோசமான மெசேஜ்.. வீட்டுக்கே சென்ற அத்துமீற முயன்ற VIRTUAL WARRIORS!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…

22 minutes ago

ஓடும் ரயிலில் நடந்த கொடூரம்! பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான மாளவிகா மோகனன்? அடக்கடவுளே!

ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…

44 minutes ago

கைமாறியது விஜய் டிவி… கோபிநாத், பிரியங்கா, மகாபா ஆனந்தை நீக்க முடிவு!

விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…

1 hour ago

டாஸ்மாக்கில் ஆண்டுக்கு ரூ.5,400 கோடி ஊழல்? இபிஎஸ் குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…

1 hour ago

சமந்தாவின் மூன்றாவது காதலர்? விரைவில் டும் டும் டும்! அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சி கொடுக்குறாரே?

தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…

2 hours ago

இளம்பெண் கொடூர கொலை… நள்ளிரவில் சரணடைந்த குற்றவாளி : கோவையில் பகீர்!

கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…

2 hours ago

This website uses cookies.