பள்ளி உணவில் பல்லி; சிகிச்சை அளிக்கப்பட்ட 19 மாணவர்கள்; தேவரசம்பட்டி அரசுப் பள்ளியில் பரபரப்பு,..

Author: Sudha
26 July 2024, 9:31 am

தர்மபுரி மாவட்டம் தேவரசம்பட்டி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது, இந்த பள்ளியில் தினந்தோறும் காலை உணவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை பள்ளிக்கு வந்த குழந்தைகள் காலை உணவை சாப்பிட்டனர்.

பல்லி கிடந்த சத்துணவை மாணவர்கள் சாப்பிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காலை உணவு சமைத்து வழங்கப்பட்ட பிறகு, அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.

அதற்கும் காலை உணவை பள்ளியில் சாப்பிடும் 19 மாணவ, மாணவிகள் சாப்பிட்டு விட்டதால், அரசு மருத்துவ குழுவினர் நேரில் வந்து, அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்

இந்த தகவல், பெற்றோருக்குத் தெரிந்து அவர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.குழந்தைகளுக்கு சமைக்கும் பொழுது அஜாக்கிரதையாக இருந்த ஊழியர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

பெற்றோர்கள் மாணவர்களை காலையில் பள்ளியிலேயே உணவருந்தும்படி அறிவுறுத்து வரும் நிலையில் இவ்வாறு மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாமல் உணவு சமைத்து கொடுப்பதால் பெற்றோர்கள் தற்போது அச்சமடைந்துள்ளனர். பல்லி விழுந்த சாப்பாட்டினை குழந்தைகளுக்கு கொடுத்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?என்பது விசாரணைக்குப் பிறகு தெரியவரும்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 251

    0

    0