உள்ளாட்சி தேர்தலில் சாதித்து காட்டிய இளம்பெண்… எங்களாலும் முடியும் என நிரூபித்த மாற்றுத்திறனாளி வேட்பாளர்..!!!

Author: Babu Lakshmanan
22 February 2022, 12:46 pm

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற இளம்பெண் வேட்பாளரும், மாற்றுத்திறனாளி வேட்பாளரும் மக்களின் கவனத்தை பெற்றுள்ளனர்.

கடந்த 19ம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி அமைப்புகளில் திமுக மற்றும் அதனை கூட்டணி கட்சிகளே முன்னிலை பெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரையில் சென்னை மாநகராட்சியில் 35க்கும் மேற்பட்ட வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். அதில், சென்னை மாநகராட்சியின் 136வது வார்டில் போட்டியிட்ட 22 வயதே ஆன இளம் திமுக வேட்பாளர் நிலவரசி துரைராஜ் வெற்றி பெற்றார். இதனையடுத்து, வெற்றி சான்றிதழை நிலவரசி பெற்றுக் கொண்டார்.

இதேபோல, நெல்லை – ஏர்வாடி பேரூராட்சி 7வது வார்டில் மமக சார்பில் போட்டியிட்ட மாற்றுத்திறனாளி வேட்பாளர் நியாஸ் வெற்றி பெற்றுள்ளார்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ