தீய திராவிடிய சிந்தனை எப்படினு பாருங்க.. முகமூடி அணிந்து குறைக்கும் ந*** யார்? கஸ்தூரி விளாசல்!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2024, 9:59 am

தீய திராவிடிய சிந்தனை எப்படினு பாருங்க.. முகமூடி அணிந்து குறைக்கும் ந*** யார்? கஸ்தூரி விளாசல்!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் நாளை தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பல கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

இந்நிலையில், நேற்று கோவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்த போது பல்வேறு கருத்துக்களை கூறியிருந்தார்.

அண்ணாமலை மக்கள் கேள்விக்கு பதில் அளித்த போது ஒரு பெண்மணி நீட் தேர்வை ரத்து செய்வீர்களா? என கேள்வி எழுப்பினார்.

அந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை , எங்கள் உயிரே போனாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. நீட் தேர்வு என்பது மக்களுக்கு ரொம்பவே நல்லது. முதன் முதலாக ஏழை மக்கள் நீட் தேர்வு மூலமாக அரசு மருத்துவ கல்லூரிக்கு செல்கிறார்கள். திமுக 1967 -ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்ததது ஐந்தே ஐந்து மருத்துவக்கல்லூரி தான். 17 தனியார் மருத்துவக்கல்லூரி தான்.

ஆனால், நாங்கள் 15 அரசு மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்து இருக்கிறோம். எங்களுடைய நோக்கமே ஏழை மக்கள் போட்டி (neet) தேர்வு மூலமாக சமூக நிதியோட மருத்துவக்கல்லூரிக்கு செல்லவேண்டும். நீட் தேர்வை எடுத்துவிட்டு தான் நாங்கள் அரசியலில் இருக்கவேண்டும் என்றால் அப்படிபட்ட அரசியலே எங்களுக்கு வேண்டாம். எல்லா மக்களும் நீட் தேர்வை ஏற்றுக்கொள்கிறார்கள்.

நீட் என்பது எங்களுடைய கொள்கையின் முழக்கம். கிராம புறத்தில் கிராமபுரத்தில் ஒரு ஏழை தாயின் குழந்தை நீட் மூலமாக மட்டுமே அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும். ஏழைத்தாயின் மகன், மகள் நீட் மூலமாக மட்டும்தான் அரசு மருத்துவக் கல்லூரிக்கு போக முடியும் ஆனால் நீட்டை எந்த காரணத்துக்காகவும் எடுக்க மாட்டோம். மாணவர்களை இறப்புக்கு தூண்டுகிறார்கள் என பேசியிருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்வினையாற்றினர். குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் அண்ணாமலையை கண்டபடி விமர்சனம் செய்தனர்.

மேலும் படிக்க: தவறான ஆளை தேர்ந்தெடுத்தால் 5 வருடம் அநீதி.. சரியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள் ; வைரமுத்து வலியுறுத்தல்!

இந்த நிலையில் அதில் ஒருவர், செத்துப் போ அண்ணாமலை என அநாகரீகமான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இதற்கு நடிகை கஸ்தூரி பதிலடி கொடுத்துள்ளார்.

அவர் தனது X தளப்பக்கத்தில், தீய திராவிடிய சிந்தனை எப்படி பாருங்கள்.இந்த பெரியாரியன் செய்துள்ளது cyber threat. Criminal offence. சட்டபடி தண்டனை கிடைக்க வேண்டும்….. திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? அப்படி யார் இந்த முகமூடி அணிந்து குறைக்கும் நாய்? பார்ப்போம் என பதிவிடடுள்ளார்.

  • Allu Arjun press meet emotional statement நானும் ஒரு குழந்தைக்கு அப்பா தான்..கண்ணீரோடு பேட்டியளித்த அல்லு அர்ஜுன்..!
  • Views: - 283

    0

    0