பெண்கள் முன்னேற்றத்தில் தமிழ்நாட்டை பாருங்க.. மணிப்பூர்ல நடந்த கொடுமை : பாஜவை விமர்சித்த கனிமொழி!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2023, 10:28 am

பெண்கள் முன்னேற்த்தில் தமிழ்நாட்டை பாருங்க.. மணிப்பூர்ல நடந்த கொடுமை : பாஜவை விமர்சித்த கனிமொழி!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையாபுரம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 128 பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கும் நிகழ்வு நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழிசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

அப்போது கனி மொழி எம்.பி பேசுகையில், தூத்துக்குடி தொகுதி முழுவதுமாக மக்கள் களம் நடத்தபட்டு அதன் மூலமாக மனுக்கள் தேர்வு செய்யபட்ட பயனாளிகளுக்கு இலவச தையல் மிஷன் வழங்கபட உள்ளது

திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பெண்கள் முன்னரே வேண்டும் அரசு வேலையில் அதிக அளவில் பெண்கள் பணி புரிய வேண்டும் என இட ஒதுக்கீடு கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.

பெண்கள் இருக்கும் அருகிலே கல்லூரி இருக்க வேண்டும் இன்று கல்லூரிகளை அமைத்து கொடுத்து பட்டம் பெற்று வாழ்வில் முன்னேற்றத்தை கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர். மகளிர் உரிமை தொகை பெண்களுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது..

பெண்கள் முன்னேற வேண்டும் இயங்க கூடிய ஆட்சியாக திமுக என்று கூறினால் மிகையாகாது. பாஜக ஆட்சியில் மணிப்பூரில் பெண்கள் கொடுமை படுத்தபட்டார்கள்.

பெண்கள் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பாதுகாப்பில்லாமல் முகாமில் தங்கி வரும் நிலைமைதான் மணிப்பூரில் உள்ளது. பெண்கள் முன்னுக்கு வர வேண்டுமென்றால் தமிழ்நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி சந்திரசேகர் மற்றும் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?