எங்கள் மீதான அடக்குமுறையை பாருங்க…. பெண் எம்பினு கூட பாக்காம ஆடையை கிழிச்சுட்டாங்க : வீடியோ வெளியிட்டு கதறிய ஜோதிமணி!!

Author: Udayachandran RadhaKrishnan
15 June 2022, 8:36 pm

டெல்லி : காவல்துறை இழுத்து சென்ற வீடியோவை பதிவிட்டு, எங்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறையைப் பாரீர் என ஜோதிமணி எம்.பி பதிவிட்டுள்ளார்.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில், ராகுல் காந்தி ஆஜரான நிலையில், இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தொடுக்கப்பட்டுள்ளதாக கூறி, காங்கிரஸ் கட்சியினர் பல் இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற்னர்.

இந்த நிலையில், இன்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, டெல்லி காவல்துறை தன்னை கிரிமினல் போல கைது செய்து ஆடை கிழித்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட போது வீடியோ பதிவு எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், காவல்துறை இழுத்து சென்ற வீடியோவை பதிவிட்டு, எங்கள் மீதான மோடி அரசின் அடக்குமுறையைப் பாரீர். இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்..இந்த அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் என பதிவிட்டுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி