காரை ரிவர்ஸ் எடுக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் விழுந்த கோரம் : உரிமையாளர் பரிதாப பலி!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2024, 1:04 pm
car
Quick Share

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம் வேல்பூர் மண்டலம் பாடகல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காடேபள்ளி ரமேஷ் (55) என்பவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.

ரமேஷ்க்கு போச்சம்பள்ளி கிராமத்தின் புறநகரில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அந்த பகுதியில் பண்டாரை வாகு ஏரி கால்வாய் அருகே மோட்டாரை அமைக்க தனது காரில் சென்றார்.

ஏரிக்கால்வாய் அருகே காரை நிறுத்திவிட்டு தன் வேலையை முடிந்த பின்னர் மீண்டும் வீட்டிற்கு செல்ல ​​காரை ரிவர்ஸ் கீயர் போட்டு பின்னால் இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தில் சிக்கி ஏரிக் கால்வாயில் விழுந்து காருடன் நீரில் ரமேஷ் நீரில் மூழ்கினார்.

அங்கிருந்தவர்கள் அவசர போலீஸ் எண் 100க்கு போன் செய்ததையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மீனவர்கள் உதவியுடன் காரை வெளியே எடுத்தபோது ரமேஷ் இறந்து கிடந்தார்.

ரமேஷ் குடும்பத்தினர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Views: - 133

0

0