திமுகவுக்கு பெரும்பான்மை… 2வது இடம் யாருக்கு…? வெளியானது லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்களின் கருத்துக்கணிப்பு..!!

Author: Babu Lakshmanan
6 April 2024, 5:08 pm

2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 30 லிருந்து 34 தொகுதிகளை திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்றும் என்று தனியார் அமைப்பு நடத்திய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

முன்னாள் லயோலா கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய இந்திய அரசியல் ஜனநாயக யுத்திகள் அமைப்பின் சார்பில் மாநில அளவில் கள ஆய்வு நடத்தப்பட்டது. நாற்பது தொகுதியில் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது.

மேலும் படிக்க: எதிர்க்கட்சி தலைவர்களை கட்சியில் இணைக்க பாஜக மிரட்டல் : எதிராக போராட தயாரா இருங்க.. சோனியா காந்தி!

அதன்படி, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி 30 முதல் 34 தொகுதி வெற்றி பெறும் வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணி 0 முதல் 1 தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளது எனவும், பாஜக தலைமையிலான கூட்டணி 0 முதல் 5 தொகுதி வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 43% முதல் 49% வாக்குகளும், அதிமுக கூட்டணி 16.20% முதல் 20% வாக்குகளும், பாஜக கூட்டணி 18.57% முதல் 24.06 % வாக்குகளும், நாம் தமிழர் 6.87% முதல் 12.02% வாக்குகளும் பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பிற கட்சிகள் 2.54% முதல் 4%
வாக்குகளை பெறும் என்றும் சொல்லப்படுகிறது.

  • Telangana bans special shows சிறப்பு காட்சிக்கு END CARD…அல்லு அர்ஜுன் ஷாக்…பேரதிர்ச்சியில் சினிமா ரசிகர்கள்…!
  • Views: - 592

    2

    1