மீண்டும் திமுக தலைவரானார் மு.க.ஸ்டாலின் : பொதுச்செயலரளாராக துரைமுருகன், பொருளாளராக டிஆர் பாலு மீண்டும் தேர்வு!!

Author: Udayachandran RadhaKrishnan
9 October 2022, 11:47 am

தி.மு.க.,வின் 15வது உட்கட்சித் தேர்தலின் இறுதி கட்டமாக, தலைவர், பொதுச்செயலர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு தேர்தல் நடக்கிறது. தி.மு.க., தலைவர் பதவிக்கு, மீண்டும் ஸ்டாலின் போட்டியிட்டார்.

இதற்காக இருநாட்களுக்கு முன்னதாக அறிவாலயத்தில் அவர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து, பொதுச்செயலர் பதவிக்கு துரைமுருகனும், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் உள்ள ‘விங்க்ஸ் கன்வென்ஷன்’ மையத்தில், இன்று (அக்.,9) கூடிய திமுக பொதுக்குழுவில், இரண்டாவது முறையாக, தி.மு.க., தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

  • Director Ram movies ஒரு படத்தில் 23 பாடல்களா…இயக்குனர் ராம் செதுக்கிய அற்புதமான படம்..சர்வேதச விழாவிற்கு தேர்வு..!