ஜிம்மில் வொர்க் அவுட்; திடீர் மாரடைப்பு: உயிரிழந்த பழம்பெரும் நடிகை மகள்,..

Author: Sudha
26 July 2024, 12:23 pm

தமிழ் சினிமாவின் அந்தக் கால நட்சத்திரத் தம்பதி எம்.என்.ராஜம், மறைந்த ஏ.எல்.ராகவன். 1950 – 1970 காலக் கட்டத்தில் பல பாடல்களைப் பாடியவர் பாடகர் ஏ.எல்.ராகவன்.

எம் என் ராஜம் கதாநாயகி, வில்லி மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருக்கிறார். இவர்தான் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முதல் பெண் உறுப்பினர் என்று சொல்லப்படுகிறது. கணவர் ஏ எல் ராகவன் மறைவுக்குப் பின் நடிப்பதிலிருந்து விலகி இருக்கிறார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள்.

இவர்களது மகள் நளினா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.

நளினா, சரவணன் என்பவரைத் திருமணம் செய்திருக்கிறார். இந்த சரவணன் இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் மைத்துனர். நளினாவின் மகன் தற்போது அமெரிக்காவில் இருக்கிறாராம். அவர் வந்த பின் நளினாவின் உடல் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிகிறது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!