கேஎஸ் அழகிரிக்கு பதில் இனி இவருதான் தமிழக காங்., தலைவர் : எம்.பி. திருநாவுக்கரசர் சூசகம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 August 2023, 8:22 am

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், உச்ச நீதிமன்றம் ராகுல் காந்தி எதிரான வழக்கில் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.

தீர்ப்பின் நகல் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து விட்டது. பாராளுமன்ற செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற தலைவருக்கும் இந்த தீர்ப்பு கிடைத்திருக்கும்.

எனவே நடந்து கொண்டுள்ள பாராளுமன்ற கூட்டத்தொடரில் ராகுல் காந்தி கண்டிப்பாக பங்கேற்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பில் மறைமுகமாக ராகுல் காந்தியை பழி வாங்கும் நோக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அண்ணாமலை பாத யாத்திரை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணாமலை தலைமையில் தற்போது நடந்து கொண்டிருப்பது பாதயாத்திரை அல்ல, அது ஒரு கார் யாத்திரை. ஒவ்வொரு தொகுதிகளையும் அந்த தொகுதி எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களை திட்டுகின்ற வேலையை தான் அண்ணாமலை செய்கிறார் திட்டும் யாத்திரையாக இது உள்ளது. இதனால் தமிழகத்தில் எந்த விதமான தாக்கமும் ஏற்படாது. இது ஒரு தோல்வி யாத்திரை என திருநாவுகரசர் விமர்சித்தார்.

அண்ணாமலை அரசியல் கற்றுக் கொள்ளவில்லை இனியாவது அரசியல் கற்றுக்கொள்வார் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் நடந்து செல்லும் போது கூட்டம் கூடவில்லை ஓடுகின்ற கூட்டத்தையும் காசு கொடுத்து கூட்டி வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து பலத்த எதிர்ப்பு வந்தவுடன் அண்ணாமலை அதிமுக குறித்த விமர்சனங்களை சமீபத்தில் தவிர்த்து வருகிறார் அதிமுக பாஜக கூட்டணி பொருந்தா கூட்டணி.

டெல்லியில் நடந்த கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரை மாற்றுவதற்கு எந்த விதமான பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மாநில தலைவர் மாற்றம் குறித்து காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்து அறிவிக்கும் என திருநாவுகரசர் தெரிவித்தார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 371

    0

    0