பயிற்சியின் போது 2 போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : ம.பி.யில் அதிர்ச்சி சம்பவம்… ஷாக் வீடியோ!!

Author: Babu Lakshmanan
28 January 2023, 11:52 am

மத்திய பிரதேசத்தில் ஒரே சமயத்தில் 2 போர் விமானங்கள் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் குவாலியர் விமானப்படை தளத்தில் போர் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்திய ராணுவத்தின் சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மொரீனா என்ற பகுதியில் இரு விமானங்களும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், இரு விமானங்களும் சுக்குநூறாகிப் போகின. விமானங்கள் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து, மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேபோல, ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இந்திய விமானப்படைக்கு சொந்தமான மேலும் ஒரு விமானமும் விபத்துக்குள்ளாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி