‘விளம்பரத்துக்காக சட்டையை கிழிக்க எடப்பாடியாருக்கு தெரியாது’.. அமைச்சர் பிடிஆர்-ன் பேச்சுக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு..!!

Author: Babu Lakshmanan
14 October 2022, 11:03 am

மதுரை; விளம்பரத்துக்காக சட்டையை கிழிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது என முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக எம்எல்ஏ செல்லூர் ராஜு மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய 10 கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் செல்லூர் கே.ராஜு, வி.வி.ராஜன் செல்லப்பா, ஆர்.பி.உதயகுமார், பெரிய புள்ளான் (எ) செல்வம், தளபதி, வெங்கடேசன், பூமிநாதன் அய்யப்பன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் கலோன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர், ஆய்வு கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய கோரிக்கைகளின் சாத்திய கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

madurai admk mla  - updatenews360

தொடர்ந்து கூட்ட இறுதியில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “வரலாற்றில் முதன் முறையாக இப்படி ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது” என பேசியதற்கு அதிமுக எம்.எல்.ஏ க்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை புறக்கணித்து செல்வதாக வெளியே செல்ல முற்பட்டனர். அப்போது அமைச்சர் மூர்த்தி சமதானம் செய்து அமர வைத்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

 admk mla sellur raju  - updatenews360

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேசும்போது;- மக்கள் பிரச்சினை குறித்து பேசினால் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அரசு அதிகாரி போலவே பேசுகிறார். மதுரையில் 2 இலட்சம் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தம், நிதியே ஒதுக்கீடு செய்யாமல் சட்டமன்ற உறுப்பினர்களிடம் முதல்வர் கோரிக்கை கேட்டு என்ன பயன் கிடைக்க போகிறது என தெரியவில்லை. சட்டமன்றத்தில் எடப்பாடியார் விளம்பரத்துக்காக சட்டையை கிழிக்க மாட்டார். மக்களுக்காகவே மக்களிடையே பிரச்சினைகள் குறித்து பேசுவார், என கூறினார்.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 550

    0

    0