திமுகவினர் திருந்தவே மாட்டாங்க… இப்ப இந்தியாவையே ஏமாற்ற முயற்சிக்கிறார் ஸ்டாலின் ; டிடிவி தினகரன் குற்றச்சாட்டு..!!!

Author: Babu Lakshmanan
29 March 2024, 5:33 pm

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி என்று தேனி தொகுதி வேட்பாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அமமுக கட்சியின் பொதுச் செயலாளரும், தேனி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளருமான டிடிவி தினகரன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, பேசியதாவது :- அதிமுகவை சுற்றி ஆணிவேர்கள் யாரும் இல்லை. சில போலியான வேர்கள்தான் உள்ளது. யார் ஆணிவேர் என்பதை காலம் பதில் சொல்லும். சட்டமன்றத் தேர்தலில் ஸ்டாலின் வாக்குறுதி அளித்த மகளிர் உரிமை தொகை 50 சதவீத பெண்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இதில் சிலிண்டருக்கு 100 ரூபாய் விலையை குறைப்பேன் என கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

தற்போது பாராளுமன்ற தேர்தலின் போது மறுபடியும் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்தியா முழுவதும் ஏமாற்ற பார்க்கிறார். திமுகவினர் திருந்தவே மாட்டார்கள் என்பதை பறை சாற்றிக் கொள்கிறார்கள். திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி என்ன பேசினார்.

40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறிவருவது இந்த ஆண்டின் மிகச்சிறந்த காமெடி. தமிழ்நாட்டில் தீய சக்தி திமுகவை ஆட்சி அதிகாரத்தை விட்டு இறக்கவும், துரோக சக்தி எடப்பாடி பழனிச்சாமியை ஒழிப்பதற்காகவும், அமமுக கட்சி மக்கள் நலன் சார்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

பபூன் ஆர்பி உதயகுமார் பேசுவதற்கெல்லாம் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி குக்கர் சின்னத்தில் அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெறும், என்றார்.

  • Bharathiraja son Manoj death இறந்த பின்பும் இப்படியா..மனோஜ் சவப்பெட்டி மீது நடந்த மோசமான செயல்..பிரபலம் காட்டம்.!
  • Close menu