மதுரையில் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் போது கஞ்சா போதையில் வந்த இளைஞர்கள், பைக்கில் சென்றவரை மடக்கி தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் இந்த விழாவிற்காக, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மதுரை மாவட்ட முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மோதலில் சுமார் 23 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் கான் முகமது ஓட்டுனராக உள்ளவர், நேற்று இரவு இருசக்கர வாகன மூலம் வேலை முடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த வாலிபர்கள் சிலர் கஞ்சா போதையில் இவரை அடித்து காயம் ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: பட்டப்பகலில் அதிர்ச்சி… குமாஸ்தாவின் வாகனத்தை வழிமறித்த கஞ்சா போதை ஆசாமிகள் ; இறுதியில் நடந்த சம்பவம்!!
படுகாயம் அடைந்த கான் முகமது தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமில்லாமல் அந்த பகுதியில் உள்ள இரண்டு கடைகளையும் அடித்து நொறுக்கி ரகளை ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மூன்று வழக்குகள் ஒத்தக்கடை காவல்துறையினர் பதிவு செய்து கஞ்சா போதையில் அட்டகாசத்தில் ஈடுபட்ட வாலிபர்களை தேடி வருகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், திமுக ஆட்சியில் போதைப் பொருட்களின் புழக்கம் சகஜமாகி விட்டதன் விளைவு தான் இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். கடந்த சில தினங்களில் கஞ்சா போதையால் நடக்கும் 4வது குற்ற சம்பவம் இது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து எப்போது விழிப்பாரோ..? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில், தவெக தலைவர் விஜய் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார். அண்மையில் தவெக…
ஃபேவரைட் நடிகை தற்போதைய இளைஞர்களை கவரும் நடிகைகளில் முன்னணி வரிசையில் நிற்பவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக…
விஜய் டிவியை ஹாட்ஸ்டார் ஜியோவுடன் இணைந்தது எல்லோரும் அறிந்த விஷயம். ஜியோ ஹாட்ஸ்டராக ஸ்டீரிமிங் ஆகி வருகிறது. கலர்ஸ் நிறுவனத்துக்கு…
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதன் மூலம் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 400 கோடி ரூபாயை வாரி…
தென்னிந்தியாவின் டாப் நடிகை நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். இவரது…
கோவை மாவட்டம் சூலூர் அருகே மாட்டு கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில், இளம்பெண்ணை ராஜேந்திரன் என்பவர் அரிவாளால் வெட்டி…
This website uses cookies.